Ellu Vaya Pookalaye - [எள்ளு வய பூக்கலையே]
Movie: Asuran
Music: G V Prakash
Direction: Vetri Maaran
Lyrics: Yugabharathi
Singers: Saindhavi
பெண்: எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே.
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா.
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா..
பெண்: கொல்லையில வாழ எல கொட்டடியில் கோழி குஞ்சு
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா.
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா..
பெண்: கொல்லையில வாழ எல கொட்டடியில் கோழி குஞ்சு
அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா.
ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா..
பெண்: காத்தோட உன் வாசம் காடெல்லாம் ஒம் பாசம்.
ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா..
ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா..
பெண்: காத்தோட உன் வாசம் காடெல்லாம் ஒம் பாசம்.
ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா..
பெண்: சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா.
சாவையும் கூறு போட்டு கொல்லய்யா..
பெண்: கல்லாக நின்னாயோ? கால் நோக நின்னாயோ??
கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு..
பெண்: மல்லாந்து போனாலும் மண்ணோடு சாஞ்சாலும்
அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு..
பெண்: தலைச்சம் புள்ளை இல்லாம சரிஞ்சது எத்தன ஆட்சி?
நீயே எங்க ராசா வா வா களத்துக்கு..
பெண்: தாயோட பாரம் மாசம் பத்தய்யா.
தாங்காம நீயும் போனா தப்பய்யா..
பெண்: எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே.
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா.
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா..
பெண்: வாள் ஏந்தி வந்தாலும் வாழாம செத்தாலும்
கம்பீரம் கொறைஞ்சிடாத நெருப்பு நீ..
பெண்: அய்யோன்னு போனாலும் ஆகாசம் போனாலும்
தண்ணீர கொளத்தில் சேர்க்கும் வரப்பு நீ..
பெண்: உழைக்க எண்ணுற ஆள உதைச்சி தள்ளுற ஊர
கைய கால வெட்டி வீசும் கருப்பு நீ..
பெண்: காட்டேரி உன்னை கண்டா ஓடாதோ?
காப்பாத்த தெய்வம் வந்து சேராதோ??
பெண்: எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே.
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா.
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா..
பெண்: கொல்லையில வாழ எல கொட்டடியில் கோழி குஞ்சு
அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா.
ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா..
பெண்: காத்தோட உன் வாசம் காடெல்லாம் ஒம் பாசம்.
ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா..
பெண்: சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா.
சாவையும் கூறு போட்டு கொல்லய்யா..!!!