Maya Nadhi - [மாய நதி]

 Movie: Kabali

Music: Santhosh Narayanan

Direction: Pa Ranjith

Lyrics: Uma Devi

Singers: Ananthu, Pradeep Kumar, Swetha Mohan



ஆண்: நெஞ்சம் எல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே.
கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே..

பெண்:நான் உன்னை காணும் வரையில் தாபத நிலையே.
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே..

ஆண்: ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்.
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்..

ஆண்:
மாய நதி இன்று மார்பில் வழியுதே.
தூய நரையிலும் காதல் மலருதே..

குழு: மாய நதி இன்று மார்பில் வழியுதே.
தூய நரையிலும் காதல் மலருதே..

ஆண்: நீர் வழியே மீன்களை போல்
என் உறவை நான் இழந்தேன்.
நீ இருந்தும் நீ இருந்தும்
ஒரு துறவை நான் அடைந்தேன்..

ஆண்: ஒளி பூக்கும் இருளே வாழ்வின் பொருளா நீ?
வலி தீர்க்கும் வழியா வாஞ்சை தர வா..

ஆண்: மாய நதி இன்று மார்பில் வழியுதே.
தூய நரையிலும் காதல் மலருதே..

ஆண்: யானை பலம் இங்கே சேரும் உறவிலே.
போன வழியிலே வாழ்க்கை திரும்புதே..

பெண்: தேசமெல்லாம் ஆளுகின்ற
ஒரு படையை நான் அடைந்தேன்.
காலம் எனும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்..

பெண்: மணலூரும் மழையாய் மடிமீது விழ வா வா.
அணை மீறும் புனலாய் மார் சாய்ந்து அழவா?

ஆண்:
மாய நதி இன்று மார்பில் வழியுதே.
தூய நரையிலும் காதல் மலருதே..

பெண்: யானை பலம் இங்கே சேரும் உறவிலே.
போன வழியிலே வாழ்க்கை திரும்புதே..!!!

Maya Nadhi Song Lyrics in Tamil

Powered by Blogger.