Neenga mudiyumaa -[நீங்க முடியுமா]

September 21, 2020

 Movie: Psycho

Music: Ilayaraja

Direction: Mysskin

Lyrics: Kabilan

Singers:  Sid Sriram


நீங்க முடியுமா
நினைவு தூங்குமா...

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா
காலம் மாறுமா
காயம் ஆறுமா...

வானம் பிரிந்த மேகமா
வாழ்வில் உனக்கு சோகமா
காதல் போயின் காதல் சாகுமா
காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்...

உயிர் போகும் நாள் வரை
உன்னை தேடுவேன்
உனை மீண்டும் பார்த்தப்பின்
கண் மூடுவேன்...

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா...

தேவன் ஈன்ற ஜீவனாக
உன்னை பார்க்கிறேன்
மீண்டும் உன்னை வேண்டுமென்று
தானம் கேட்கிறேன்...

நீ கண்கள் தேடும் வழியோ
என் கருணை கொண்ட மழையோ
நீ மழலை பேசும் மொழியோ
என் மனதை நெய்த இழையோ...

வீசும் தென்றல் என்னை விட்டு
விலகி போகுமோ
போன தென்றால் என்று எந்தன்
சுவாசம் ஆகுமோ
இரு விழியிலே ஒரு கனவென
உன்னை தொடருவேன்...

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா
காலம் மாறுமா
காயம் ஆறுமா...

மூன்று காலில் காதல் தேடி
நடந்து போகிறேன்
இரண்டு இரவு இருந்த போதும்
நிலவை கேட்கிறேன்...

நீ கடந்து போன திசையோ
நான் கேட்க மறந்த இசையோ
நீ தெய்வம் தேடும் சிலையோ
உன்னை மீட்க என்ன விலையோ...

இன்று இல்லை நீ எனக்கு
உடைந்து போகிறேன்
மீண்டு வாழ நாளை உண்டு
மீட்க வருகிறேன்...

ஒரு தனிமையும்
ஒரு தனிமையும்
இனி இனையுமே...

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா
காலம் மாறுமா
காயம் ஆறுமா...

வானம் பிரிந்த மேகமா
வாழ்வில் உனக்கு சோகமா
காதல் போயின் காதல் சாகுமா
காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்...

உயிர் போகும் நாள் வரை
உன்னை தேடுவேன்
உனை மீண்டும் பார்த்தப்பின்
கண் மூடுவேன்...

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா...!

 









Powered by Blogger.