Aattu Kutti Muttai Ittu - [ஆட்டுக்குட்டி முட்டையிட்டு]

Movie: 16 Vayathinile

Music: Ilayaraja

Direction: Bharathiraja

Lyrics: Kannadhasan

Singers:  Malaysia Vasudevan, S. Janaki

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
கோழிக்குட்டி வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு
பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையில்ல சாமி
இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா
இன்னும் இருக்குது சாமி...

கூத்து மேடை
ராஜாவுக்கு ஏ ஏய் ஏ…..
கூத்து மேடை ராஜாவுக்கு
நூற்றிரெண்டு பொண்டாட்டியாம்
நூற்றிரெண்டு பெண்டாட்டியும்
வாத்து முட்டை போட்டதுவாம்
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு
மொத்தம் இருபத்து ஆறு...

சின்ன குட்டிகளின் மேல் ஆணை
புது சட்டிகளின் மேல் ஆணை
இரு வள்ளுவன் ஏட்டிலுண்டு
பரம்பரை பாட்டிலுண்டு
கதையில்ல மகராசி...

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
கோழிக்குட்டி வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு
பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையில்ல சாமி
இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா
இன்னும் இருக்குது சாமி...

காக்கையில்லா சீமையிலே
காட்டெருமை மேய்க்கையிலே
பாட்டெடுத்து பாடிப்புட்டு
நோட்டமிட்ட சின்னப் பொண்ணு
சந்தைக்கு போனா நானும்
சாட்சிக்கு வர வா
சம்பந்தம் பண்ண
உனக்கு சம்மதம்தானா
காக்கையில்லா சீமையிலே...

காக்கையில்லா சீமையிலே
காட்டெருமை மேய்க்கையிலே
காக்க வச்சி நேரம் பாத்து
பாக்கு வச்ச ஆசை மச்சான்
சந்தைக்கு போறேன்
நீங்க சாட்சிக்கு வாங்க க க
சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம் தாங்க...

அட இந்த பக்கம் பாருங்களே
என் கன்னி மொழி கேளுங்களே
அட ஏண்டி என்ன வஞ்சனைனு
கேக்குறீயே கேக்குறீயே
பழைய நெனப்புடா
பேராண்டி பழைய நெனப்புடா...

கிட்டப்பாவின் பாட்டை கேட்டேன்
சின்னப்பாவை நேரில் பார்த்தேன்
கொட்ட கொட்ட வருகுதம்மா
சங்கீதமா பெருகுதம்மா...

வேலைக்கு போனா
எனக்கு ஈடுயில்ல பொண்ணு
பாட்டுல நின்னா நானும் நூத்துல ஒன்னு
என் திறமையை காட்டட்டுமா
இரண்டு சங்கதியை போடட்டுமா...

ததரின ததரின
ததரின ததரின...!!

 
Powered by Blogger.