Maanuthu Mandhayilae - [மானுத்து மந்தையில]
Movie: Kizhakku Cheemayile
Music: A R Rahman
Direction: Bharathiraja
Lyrics: Vairamuthu
Singers: S.P.B and Sasirekha
ஆண் : மானுத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே...
பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே...
பெண்குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி...
அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி...!
ஆண்&பெண் குழு : சீரு சொமந்த சாதி சனமே...
ஆறு கடந்தா ஊரு வருமே...
ஆண் : நாட்டுக்கோழி அடிச்சு
நாக்குசொட்ட சமைச்சு
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா...
பெண்குழு : மேலு காலு வலிச்சா
வெள்ளப்பூண்டு உரிச்சி
வெல்லங்கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா...
ஆண் : பச்ச ஒடம்புக்காரி
பாத்து நடக்கச்சொல்லுங்க...
பெண்குழு : பிள்ளக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு...
ஆண் : மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு...
மானுத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே...
பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே...
பெண்குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி...
அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி...
ஆண்&பெண் குழு: சீரு சொமந்த சாதி சனமே...
ஆறு கடந்தா ஊரு வருமே...
ஆண் : ஆட்டுப்பால் குடிச்சா
அறிவழிஞ்சி போகுமுன்னு...
எருமப்பால் குடிச்சா
ஏப்பம் வந்து சேருமுன்னு...
ஆண்&பெண் குழு : காராம்பசு ஓட்டி வாராண்டி... தாய் மாமன்.
ஆண் : வெள்ளிச்சங்கு செஞ்சா
வெலக்கி வெக்க வேணுமுன்னு...
தங்கத்தில் சங்கு
செஞ்சி தாராண்டி தாய் மாமன்...
பெண்குழு : பச்ச ஒடம்புக்காரி... பாத்து நடக்கச்சொல்லுங்க...
ஆண் : ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு...
மச்சான ஈரத்துணி
கட்டி இறுக்கச்சொல்லு...
மானுத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே...
ஆண்: அய்யோ...
ஆண் : பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே...
பெண்குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி...
அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி...
ஆண் : சீரு சொமந்த சாதி சனமே...
ஆறு கடந்தா ஊரு வருமே...
ஆண் : ஹோய்...
ஆண்&பெண் குழு: சீரு சொமந்த சாதி சனமே...
ஆறு கடந்தா ஊரு வருமே...
ஆண் : மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே...(2)
ஆண் : போடு...
ஆண் : பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே...!