Rasathi en Usuru - [ ராசாத்தி என் உசுரு ]

Movie: Thiruda Thiruda

Music: A. R. Rahman

Direction: Mani Ratnam

Lyrics: Vairamuthu

Singers:  Shahul Hameed


ஆண்: ராசாத்தி என் உசுரு என்னதில்ல..

ஆண்: பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள..

ஆண்: நீ போனா.. என் உடம்பு மண்ணுக்குள்ள..

ஆண்: ராவோடு சேதி வரும் வாடி புள்ள..

ஆண்: ராசாத்தி என் உசுரு என்னதில்ல..

ஆண்: கார வீட்டு திண்ணையில
கறிக்கு மஞ்சள் அரைக்கையில..

குழு: மஞ்சள அரைக்கும் முன்ன
மனச அரச்சவளே..

ஆண்: கரிசாக் காட்டு ஓடையிலே
கண்டாங்கி தொவைகயிலே..

குழு: துணிய நனைய விட்டு
மனச புழிஞ்சவளே..

ஆண்: அந்த களத்து மேட்டில்
என்னை இழுத்து முடிஞ்சிகிட்ட
போறவளே…

குழு: போரவ போரவதான்
போத்திக்கிட்டு போனவதான்..

ஆண்: அந்த கல்யாண சேலையில
கண்ணீரை தொடச்சிகிட்டு போறவளே…

குழு: போறவ போறவ தான்
பொஞ்சாதியா போனவதான்..

ஆண்: நான் தந்த மல்லிகைய
நட்டாத்தில் போட்டு விட்டு
அரளிப் பூச்சூடி அழுதபடி போற புள்ள..

குழு: (கடலக் காட்டுக்குள்ள
கையடுச்சு சொன்ன புள்ள
காத்‌துல எழுதனும்
பொம்பலைங்க சொன்ன சொல்ல) (2)

ஆண்: ராசாத்தி என் உசுரு என்னதில்ல..

ஆண்: பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள..

ஆண்: நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள..

ஆண்: ராவோடு சேதி வரும் வாடி புள்ள..

ஆண்: ராசாத்தி என் உசுரு என்னதில்ல..

ஆண்: தொட்டு தொட்டு பொட்டு வச்ச
சுட்டு விரல் காயலியே..

குழு: மறிக்கொழுந்து வெச்ச கையில்
வாசம் இன்னும் போகலையே..

ஆண்: மருதையில வாங்கித் தந்த
வளவி ஓடையலையே..

குழு: மல்லு வேட்டி மத்தியில
மஞ்சக் கர மாறலையே..

ஆண்: அந்தக் கழுத்து தேமலையும்
காதோர மச்சத்தையும் பாப்பதெப்போ?

குழு: பாப்பதெப்போ பாப்பதெப்போ
பௌர்ணமியும் வாரதெப்போ??

ஆண்: அந்தக் கொலுசு மணி சிரிப்பும்
கொமரி இளஞ் சிரிப்பும் கேட்பதெப்போ?

குழு: கேட்பதெப்போ கேட்பதெப்போ
கீரதண்டும் பூப்பதெப்போ??

ஆண்: கருவேலங் காட்டுக்குள்ள
கரிச்சான்குருவி ஒண்னு
சுதி மாறிக் கத்துதம்மா
தொணையத்தான் காணோமின்னு..

குழு: (கடலக் காட்டுக்குள்ள
கையடுச்சு சொன்ன புள்ள
காத்‌துல எழுதனும்
பொம்பலைங்க சொன்ன சொல்ல) (2)

ஆண்: ராசாத்தி என் உசுரு என்னதில்ல..

ஆண்: பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள..

ஆண்: நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள..

ஆண்: ராவோடு சேதி வரும் வாடிபுள்ள..

ஆண்: ராசாத்தி என் உசுரு என்னதில்ல..

ஆண்: பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள..!!!
Powered by Blogger.