Aval Apdi Ondrum - [அவள் அப்படி ஒன்றும்]

Movie: Angadi Theru

Music: Vijay Antony & G.V. Prakash

Direction: Vasanthabalan

Lyrics: Na Muthu Kumar

Singers: Vineeth Sreenivasan, Ranjith & Janaki Iyer


அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள்அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள்அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள்அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகளை அனைத்து உறங்கவில்லை
நான் பொம்மைபோல பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கைவிரல் மோதிரம் தங்கமில்லை
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள்அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை

அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமில்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள்அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை..!!



Powered by Blogger.