Kadhaigalai Pesum - [கதைகளை பேசும்]

Movie: Angadi Theru

Music: G.V. Prakash

Direction: Vasanthabalan

Lyrics: Na Muthu Kumar

Singers: Benny Dayal, Hamsika Iyer


ஆண்: கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே

கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே

ஆண்: ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
பெண்: ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே

ஆண்: கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே

பெண்: கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
வருகிற வாசனை நீயல்லவா
ஆண்: உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
சர்க்கரை தடவிய நொடியல்லவா

பெண்: கல்லும் மண்ணும் ஓஓ.. வீடுகளில்லை
ஆண்: ஓ அன்பின் வீடே ஓஓ.. அழிவது இல்லை

பெண்: வெறும் கரையில் படுத்துக்கொண்டு
விண்மீன் பார்ப்பது யோகமடா

ஆண்: உன் மடியில் இருந்தால்
வாழ்க்கையில் எதுவும் தேவை இல்லையடி

கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே

பெண்: உனக்குள் தொடங்கி உனக்குள் தானே
எந்தன் உலகம் முடிகிறதே
ஆண்: உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே

பெண்: ஓ இரவின் மடியில்
குழந்தைகள் ஆவோம்
ஆண்: ஓ இருட்டின் நதியில்
இறங்கி போவோம்

பெண்: நேற்றென்னும் சோகம் நெருப்பாய்
வந்து தீ மூட்டும்
ஆண்: இன்றென்னும் மழையில் அத்தனை
நெருப்பும் பூக்கள் நீட்டுமே

கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே

ஆண்: ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
பெண்: ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே

ஆண்: ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
பெண்: ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே...!!!



Powered by Blogger.