Nee Yenadharuginil Nee - [நீ எனதருகினில் நீ]

 Movie: Oh Manapenne

Music: Vishal Chandrashekhar

Direction: Kaarthikk Sundar

Lyrics: Niranjan Bharathi

Singers: Shakthisree Gopalan


நீ எனதருகினில் நீ 
இதை விட ஒரு கவிதையே கிடையாதே 
நீ எனதுயிரினில் நீ 
இதை விட ஒரு புனிதமும் இருக்காதே 

காற்றில் பூ போல நெஞ்சம் கூத்தாடுதே 
கண்கள் பாக்காத வெட்கம் பந்தாடுதே 
இது வரை தீண்டாத ஒரு இன்பம் கை நீட்டுதே 

கனவா நிஜமா இது இரண்டும் தானா 
விடை அறிகின்ற தேடல்கள் 
தேவை தானா 
வெயிலா மழையா இது வானவில்லா 
இதை அணைக்கின்ற ஆகாயம் 
நானே நானா 

காதல் பாடிடும் பாடல் 
நெஞ்சோரம் கேட்கின்றதே 
அடடா ஒரு வித மயக்கம் 
கண்ணோரம் பூக்கின்றதே 

போகாதது சாகாதது 
உன்னோடு என் யோசனை 
ஓ ஓ மூழாதது வாழாதது 
என்னோடு உன் வாசனை 
இதுவரை உணராத உறவொன்று உறவாடுது 

கனவா நிஜமா இது இரண்டும் தானா 
விடை அறிகின்ற தேடல்கள் 
தேவை தானா 
வெயிலா மழையா இது வானவில்லா 
இதை அணைக்கின்ற ஆகாயம் 
நானே நானா...!!!

Nee Yenadharuginil Nee Lyrics in Tamil


Powered by Blogger.