Senthoora Poove - [செந்தூரப்பூவே]

 

Movie: 16 Vayathinile

Music: Ilayaraja

Direction: Bharathiraja

Lyrics: Gangai Amaran

Singers:  S Janaki



"செந்தூரப்பூவே.."

செந்தூரப்பூவே
செந்தூரப்பூவே
சில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ

செந்தூரப்பூவே
செந்தூரப்பூவே
சில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப்பூவே..

தென்றலைத் தூதுவிட்டு
ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு
இன்பக் கனவினில் நான் மிதப்பேன்

கன்னிப் பருவத்தின்
வந்த கனவிதுவே
எண்ண இனிக்குது
அந்த நினைவதுவே

வண்ணப்பூவே
தென்றல் காற்றே
என்னைத் தேடி சுகம் வருமோ

செந்தூரப்பூவே...

செந்தூரப்பூவே
செந்தூரப்பூவே
சில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப்பூவே..

நீலக்கருங்குயிலே
தென்னஞ் சோலைக் குருவிகளே
கோலமிடும் மயிலே
நல்ல கானப் பறவைகளே

மாலை வரும் அந்த
நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும்
பூவை இறைத்திடுங்கள்

வண்ணப்பூவே
தென்றல் காற்றே
என்னைத்தேடி சுகம் வருமோ

செந்தூரப்பூவே..

செந்தூரப்பூவே
செந்தூரப்பூவே
சில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ!

Senthoora Poove

Senthoora Poove is one of the all time mega hits of mastero Ilayaraja and Bharathiraja combination. Senthoora Poove from 16 Vayathinile brought National award to greatest singer S.Janaki. This song is one of the trendsetter songs for heroine introduction, where Sridevi in this song is remembered for her gracefulness. 

Powered by Blogger.