Vellai Pookal - [வெள்ளை பூக்கள்]
Movie: Kannathil Muthamittal
Music: AR Rahman
Direction: Mani Rathnam
Lyrics: Vairamuthu
Singers: AR Rahman
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே..
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே..
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே..
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே..
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கத கதப்பில்..
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்....
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே..
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே..
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே..
மலரே சோம்பல் முறித்து எழுகவே...
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கத கதப்பில்..
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்...
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே..
காற்றின் பேரிசையும்
மழை பாடும் பாடல்களும் ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ??
கோடி கீர்த்தனையும் கவி கோர்த்த வார்தைகளும் துளி கண்ணீர் போல்
அர்த்தம் தருமோ??
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே..
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே..
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே..
மலரே சோம்பல் முறித்து எழுகவே...
எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே..
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ..
அங்கு கூவதோ வெள்ளை குயிலே...
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே...
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே..
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே...!!