Sundari kannal oru sethi -[சுந்தரி கண்ணால் ஒரு சேதி]
Movie: Thalapathi
Music: Ilayaraja
Direction: Mani Ratnam
Lyrics: Vaali
Singers: S.P. Bala Subrahmaniyam and S. Janaki
பெண் : என்னையே...
தந்தேன் உனக்காக...
ஜென்மமே...கொண்டேன்...
அதற்காக.
ஆண் : நான் உனை...
நீங்க மாட்டேன்..
நீங்கினால்...தூங்க
மாட்டேன்...சேர்ந்ததே
நம்ஜீவனே.
சுந்தரி
கண்ணால்...ஒரு சேதி
சொல்லடி இந்நாள்
நல்ல தேதி...
பெண் : என்னையே
தந்தேன் உனக்காக...
ஜென்மமே...கொண்டேன்...
அதற்காக.
பெண் : வாய் மொழிந்த
வார்த்தை யாவும் காற்றில்
போனால் நியாயமா.?பாய்
விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா.!
ஆண் : ஆஆ...வாள் பிடித்து
நின்றால் கூட நெஞ்சில்
உந்தன் ஊர்வலம்...
போர்க்களத்தில் சாய்ந்தால்
கூட ஜீவன் உன்னை
சேர்ந்திடும்...
பெண் : தேனிலவு நான்..
வாழ ஏன் இந்த
சோதனை...
ஆண் : வான் நிலவை...
நீ கேளு கூறும் என்
வேதனை...
பெண் : என்னைத்தான்
அன்பே மறந்தாயோ?
ஆண் : மறப்பேன் என்றே
நினைத்தாயோ...
பெண் : என்னையே
தந்தேன் உனக்காக...
ஜென்மமே...கொண்டேன்...
அதற்காக.
ஆண் : சுந்தரி
கண்ணால் ஒரு
சேதி...சொல்லடி
இந்நாள் நல்ல தேதி..
பெண் : நான் உனை...
நீங்க மாட்டேன்...
நீங்கினால்...தூங்க
மாட்டேன் சேர்ந்ததே...
நம் ஜீவனே...
ஆண் : சுந்தரி
கண்ணால் ஒரு
சேதி...சொல்லடி
இந்நாள் நல்ல தேதி...
பெண் : என்னையே...
தந்தேன் உனக்காக...
ஜென்மமே...கொண்டேன்...
அதற்காக.
பெண் : சோலையிலும்
முட்கள் தோன்றும் நானும்
நீயும் நீங்கினால்...பாலையிலும்
பூக்கள் பூக்கும் நான் உன்
மார்பில் தூங்கினால்...
ஆண் : ஆஆ...மாதங்களும்
வாரம் ஆகும் நானும் நீயும்
கூடினால்...வாரங்களும்
மாதம் ஆகும் பாதை மாறி
ஓடினால்...
பெண் : கோடி சுகம்
வாராதோ...நீ எனை
தீண்டினால்...
ஆண் : காயங்களும்
ஆறாதோ...நீ எதிர்
தோன்றினால்...
பெண் : உடனே
வந்தால் உயிர்
வாழும்...
ஆண் : வருவேன்
அந்நாள் வரக் கூடும்...
ஆண் : சுந்தரி
கண்ணால் ஒரு
சேதி...சொல்லடி
இந்நாள் நல்ல தேதி...
பெண் : என்னையே...
தந்தேன் உனக்காக...
ஜென்மமே...கொண்டேன்...
அதற்காக.
ஆண் : நான் உனை
நீங்க...மாட்டேன்
நீங்கினால்...தூங்க
மாட்டேன்...சேர்ந்ததே...
நம் ஜீவனே.
ஆண் : சுந்தரி
கண்ணால் ஒரு
சேதி...சொல்லடி
இந்நாள் நல்ல தேதி...
பெண் : என்னையே...
தந்தேன் உனக்காக...
ஜென்மமே...கொண்டேன்...
அதற்காக.!!!