Ilamai Ennum Poonkaatru - [இளமையெனும் பூங்காற்று]

August 05, 2021

 Movie: Pagalil Oru Iravu

Music: Ilayaraja

Direction: I.V. Sasi

Lyrics: Kannadasan

Singers: S.P Balasubramaniyam


ஆண்: இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு.
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்..

ஆண்: இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு.
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்..

ஆண்: ஒரே வீணை... ஒரே ராகம்...

ஆண்: தன்னை மறந்து மண்ணில் விழுந்து.
இளமை மலரின் மீது கண்ணை இழந்த வண்டு..

ஆண்: தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம்.
கங்கை நதிக்கு மண்ணில் அணையா..

ஆண்: இளமையெனும் பூங்காற்று..

ஆண்: அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற.
அள்ளி அணைத்த கைகள்.
கேட்க நினைத்தாள் மறந்தாள்..

ஆண்: கேள்வி எழும் முன் விழுந்தாள்.
எந்த உடலோ எந்த உறவோ?

ஆண்: இளமையெனும் பூங்காற்று..

ஆண்: மங்கை இனமும் மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன?
தேகம் துடித்தால் கண்ணேது?
கூந்தல் கலைந்த கனியே..

ஆண்: கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ?

ஆண்: இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு.
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்..

ஆண்: ஒரே வீணை... ஒரே ராகம்
ஒரே வீணை... ஒரே ராகம்...!!!

Ilamai ennum poonkaatru song lyrics in Tamil.

Powered by Blogger.