Kan Pesum Vaarthaigal - [கண் பேசும் வார்த்தைகள்]

August 06, 2021

 Movie: 7G Rainbow Colony

Music: Yuvan Shankar Raja

Direction: Selvaragavan

Lyrics: Na. Muthukumar

Singers: Karthik


ஆண்: கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை.
காத்திருந்தால் பெண் கனிவதில்லை. 
ஒரு முகம்மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை. 
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை..

ஆண்: காற்றில் இலைகள் பறந்த பிறகும் 
கிளையின் தழும்புகள் அழிவதில்லை.
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை..

ஆண்: ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் 
வருகிற வழி அவள் அறிவதில்லை.
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை..

ஆண்: கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை.
காத்திருந்தால் பெண் கனிவதில்லை. 
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை.
கடல் கை மூடி மறைவதில்லை..

ஆண்: காட்டிலே காயும் நிலவு 
கண்டு கொள்ள யாருமில்லை.
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை..

ஆண்: தூரத்தில் தெரியும் வெளிச்சம் 
பாதைக்கு சொந்தம் இல்லை.
மின்னலின் ஒளியை பிடிக்க 
மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை..

ஆண்: விழி உனக்கு சொந்தமடி. 
வேதனைகள் எனக்கு சொந்தமடி.
அலை கடலை கண்ட பின்னே
நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி..

ஆண்: கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை.
காத்திருந்தால் பெண் கனிவதில்லை.
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை.
கடல் கை மூடி மறைவதில்லை.

ஆண்: உலகத்தில் எத்தனை பெண் உள்ளது.
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது.
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது.
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது..

ஆண்: பனி துளி வந்து மோதியதால் 
இந்த முள்ளும் இங்கே துண்டானது.
பூமியில் உள்ள பொய்கள் எல்லாம்
அட புடவை கட்டி பெண் ஆனது.

ஆண்: ஏ புயல் அடித்தால் மழை இருக்கும். 
மரங்களும் பூக்களும் மறைந்து விடும்.
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்..

ஆண்: ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் 
வருகிற வழி அவள் அறிவதில்லை.
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை..

ஆண்: ஹே கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை.
காத்திருந்தால் பெண் கனிவதில்லை.
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை.
கடல் கை மூடி மறைவதில்லை..

ஆண்: காற்றில் இலைகள் பறந்த பிறகும் 
கிளையின் தழும்புகள் அழிவதில்லை.
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை...!!!

Kan Pesum Vaarthaigal Song Lyrics in Tamil

Powered by Blogger.