Vazhi Neduga Kaattumalli - [வழி நெடுக காட்டுமல்லி]
Singer: Ilaiyaraja, Ananya Bhat
ஆண்: வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா வருமா வீட்டுக்குள்ள
காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
வழி நெடுக காட்டுமல்லி
பெண்: வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது
பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி
ஆண்: கனவெனக்கு வந்ததில்லை
இது நெசமா கனவு இல்ல
பெண்: கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சு வாழ்ந்ததில்ல
ஆண்: மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகுற நெனவுகளே
பெண்: ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
உறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்
ஆண்: காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க
பெண்: வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்க்கும் கவனமில்லை
ஆண்: காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
பெண்: கிட்ட வரும் நேரத்துல
எட்டி போற தூரத்துல
ஆண்: நீ இருக்க உள்ளுக்குள்ள
உன்ன விட்டு போவதில்ல
பெண்: உலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
ஆண்: இரு சிறு உசுரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது
பெண்: சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்
பெண்: வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை
ஆண்: எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா வருமா வீட்டுக்குள்ள
பெண்: பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
இருவர்: வழி நெடுக காட்டுமல்லி...!!!
Vali Neduga Kaatu Malli is a beautiful Tamil song from the movie Viduthalai, written by the legendary Ilaiyaraaja. In this song, the heroine is poetically compared to a delicate forest jasmine flower (kaatu malli) blooming along the journey path. The lyrics express the hero’s hope and longing for this jasmine flower (the heroine) to eventually enter his home, symbolizing love and togetherness.