Veera Raja Veera - [வீரா ராஜா வீர]

Movie: Ponniyin Selvan

Music: A.R Rahman

Director: Mani Rathnam

Lyrics: Ilango Krishnan

Singers: Shankar Mahadevan, K.S Chithra, Harini


ஆண்கள்: காணீரோ நீர் காண்
சோழ வெற்றி வாள் ஒன்றை காணீரோ
ஓர் அழகிய பூவே
செல்லுதியோ மலரிடு போ சகி

ஆண் & குழு: வீரா ராஜா வீர
சூரா தீர சூர
வீழா சோழ வீர
சீரார் ஞாலம் வாழ
வாராய் வாகை சூட

தொடுவோர் பகைப்போரை
நடுகல் சேர்க்கும் வீர
மாறா காதல் மார
பூவோர் ஏங்கும் தீர

பாவோர் போற்றும் வீர
உடைவாள் அரை தாங்க
பருதோள் புவி தாங்க
வளவா எமை ஆள
வருவாய் கலம் ஏற
ஆயிரம் வேழம் போல
போர்க்களம் சேரும் சோழ

வேந்தா ராஜ ராஜ
வாராய் வாகை சூட
வீரா ராஜா வீர
சூரா தீர சூர

பெண்கள்: விறலியர் கானம் பாட
கணிகையர் நடனமாட
பாவையார் குலவை போட
பரிதேர் சகடமாட

அலைமேல் கதிரை போல
விளங்கிடும் அருமதேவ
படையணி பெருமை சாற்ற
புலவர்கள் தமிழும் தீர
கடல் மேல் புயலைப்போல
கலங்கல் விரைந்து பாய
வன்னலை சீராட்ட
தென்புலம் ஏகும் வீர

ஆண்: வீரா ராஜா வீர
சூரா தீர சூர

பெண்: ஹா ஆஆஆ...
விறலியர் கானம் பாட
கணிகையர் நடனம் ஆட
பாவையர் குலவை போட
பரிதேர் சகடமாட

அலைமேல் கதிரைப் போல
விளங்கிடும் அருமதேவ
படையணி பெருமை சாற்ற
புலவர்கள் தமிழும் தீர
கடல் மேல் புயலைப்போல
கலங்கள் விரைந்து பாய
வன்னலை சீராட்ட
தென்புலம் ஏகும் வீர

ஆண்: வீரா ராஜா வீர
சூரா தீர சூர

குழு: கூற்றாகி செல்
காற்றாகி செல்
சர சர சர சரவென
வேல்மழை தான் பெய்திட
பர பர பர பரவென
பாயட்டும் பாய்மரம்

ஆண்: ஹா ஆஆஆ...

குழு: மறவர்கள் வீரம் கான
சமுத்திரம் வெறுவிப் போகும்
உருவிய வாளைக் கண்டு
பிறைமதி நாணிப்போகும்

எதிரிகள் உதிரம் சேர்ந்து
குதிகடல் வண்ணம் மாறும்
உதிர்ந்திடும் பகைவர் தேகம்
கடலுக்கு அன்னமாகும்

புலிமகன் வீரம் கண்டு
பகைப்புலம் சிதறி ஓடும்
சரமழை பெய்தல் கண்டு
கடல் அலை கரைக்கு ஓடும்

அடடா பெரும் வீர
எடடா துடிவாளை
தொடடா சர மாலை
அடுடா பகைவோரை

ஆண் & குழு: வீரா ராஜா வீர
சூரா தீர சூர
வீழா சோழ வீர
சீரார் ஞாலம் வாழ
வாராய் வாகை சூட

பெண்கள்: தொடுவோர் பகைப்போரை
நடுகல் சேர்க்கும் வீர
மாறா காதல் மார
பூவோர் ஏங்கும் தீர
ஆயிரம் வேழம் போல
போர்க்களம் சேரும் சோழ

குழு: வேந்தா ராஜ ராஜ
வாராய் வாகை சூட

எம் தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க

எம் தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க

எம் தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க
வீரா...!!!


Veera Raja Veera Ponniyin Selvan

P.S: Ponniyin Selvan I & II are the classic films by Mani Rathnam. Ponniyin Selvan is a dream project for Tamil Cinema Industry. Music by genius A.R Rahman. Rahman has given outstanding compositions to both the movies but this Veera Raja Veera song is something beyond all. Ilango Krishna lyrics gets back to 10th century Chola period. This song brings Tamil patriotism to all who loves the language and Chola empire.

Powered by Blogger.