Vidai Kodu Engal Naadae - [விடைகொடு எங்கள் நாடே]
Vidai Kodu Engal Naadae - [விடைகொடு எங்கள் நாடே]
Movie: Kannathil Muthamittal
Music: AR Rahman
Direction: Mani Rathnam
Lyrics: Vairanuthu
Singers: M S Viswanathan, Balram, Febi Mani, AR Reihana, Manikka Vinayagam
விடைகொடு எங்கள் நாடே..
கடல் வாசல் தெளிக்கும் வீடே..
பனைமரக் காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா??
கடல் வாசல் தெளிக்கும் வீடே..
பனைமரக் காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா??
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்...
விடைகொடு எங்கள் நாடே..
கடல் வாசல் தெளிக்கும் வீடே..
பனைமரக் காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா??
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்...
கந்தல் ஆனாலும் தாய் மடிபோல்
ஒரு சுகம் வருமா? வருமா??
கந்தல் ஆனாலும் தாய் மடிபோல்
ஒரு சுகம் வருமா? வருமா??
ஒரு சுகம் வருமா? வருமா??
சொர்க்கம் சென்றாலும் சொந்த
ஊர் போல் சுதந்திரம் வருமா? வருமா??
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே??
பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்...
விடைகொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக் காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா??
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்...
எங்கள் சங்கிதம்
பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்..
எங்கள் சங்கிதம்
பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்..
எங்கள் இளம் திங்கள்
வெடிகுண்டு புகையிலே புதைத்தோம்..
முன்னிரவில் மலரில் கிடந்தோம்
பின்னிரவில் முள்ளில் கிழிந்தோம்..
கடல் நீர் பறவையாய் இருந்தால் சந்திப்போம்
வனமே, மலர்களே வாழ்ந்தால் சந்திப்போம்
தலையில் கொஞ்சம், நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம்...
விடைகொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக் காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா??
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்...!!